#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984

தமிழ் காமிக்ஸ் அன்பர்கள் சமூகத்திற்கு வணக்கம். திருவிழா கோலங்கள் களைகட்டிய இப்பண்டிகை நாட்களில், யாவரும் உற்றார் உறவினர்களுடன் சந்தோஷமான கட்டங்களை அனுபவித்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மழைமேகங்களும் ரம்மியமான ஒரு சூழ்நிலையை அதற்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
நிற்க. முன்னுக்கு பின் முரனான வாக்கியங்களாக இருக்கின்றனவே என்று யோசித்தால் அதில் தவறேதும் இல்லை, அதற்கான விளக்கம் பதிவின் கடைசியில் உள்ளது. அதற்கு முன்பு வழக்கமான வேலையை கவனிப்போம்.
சென்ற பதிவுவாக வெளிவந்த ராணி காமிக்ஸ் இதழ்: 2 கவ்பாய் சாகஸத்தின் நினைவுகூறல் நண்பர்களிடையே பெற்ற வரவேற்பிற்கு என் நன்றிகள்.  வழக்கம் போல உங்கள் கருத்துகளுக்கான என் பதிலை (வழமை போலவே அதுவும் தாமதமாக) அங்கு படிக்கலாம். இனி, நமது இன்றைய பதிவை ஜகுருதியாக காணலாமா...
மாதம் ஒன்றிற்கு ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதை என்ற பாணியில், அழகியை தேடியை தொடர்ந்து, ராணி காமிக்சின் மூன்றாவது இதழாக, பாண்டின் அடுத்த தாக்குதலை தாங்கி வெளிவந்த இதழ் தான், ‘மந்திரியை கடத்திய மாணவி’.
ராணி #3: மந்திரியை கடத்திய மாணவிராணி #3: மந்திரியை கடத்திய மாணவி 007 ஜேம்ஸ் பாண்ட் | 01 ஆகஸ்ட் 1984
இங்கிலாந்தின் சசெக்ஸ் பகுதியில் ஆள் அரவம் இல்லாத ஒரு ஒதுக்குபுரத்தில் ஆரம்பிக்கிறது, பாண்டின் இந்த சாகசம். மற்றவர்கள் கண்களிற்கு சாதாரண ஒரு வீடாக தெரியும் கட்டிடத்தின் உள்ளே, இங்கிலாந்தின் உளவுத்துறை செயலகம் கமுக்கமாக பணியாற்றி கொண்டிருந்தது.
அந்த நள்ளிரவு வேளையிலே, அங்கு நெவ்ஸ்கி நடவடிக்கை என்ற பெயரில் கிடைக்கபெற்ற ஒரு தகவலை பற்றி ஆராய்ந்து  கொண்டு அறிமுகமாகிறார்கள், இங்கிலாந்து உளவுத்துறையின் அதிகாரி வில்லியம், மற்றும் அவரது அந்தரங்க செயலாளர் கிரேசி.
அவர்களுக்கு துணைபுரிய துப்புகிடைத்த களத்தில் பணியாற்றி    கொண்டிருப்பவர், வேறு யார், நமது சாகஸ ஹீரோ ஜேம்ஸ் பாண்ட் தான். அங்கு ஒதுக்குபுறமாக நிறுத்தபட்டு இருந்த, சந்தேகத்திற்கு இடமான ஒரு அழகியின் பிரவேசம்ஊர்தியை நோட்டம் இட எத்தனிக்கும் போது, வானத்தில் திடீரென்று தோன்றும் காட்சி அவர் கவனத்தை திசைமாற்றுகிறது.

வானத்தில் இருந்து இறங்கி வரும் தேவதையை போல, ஒரு பெண் உடலில் எவ்வித ஆடையும் இல்லாமல் அவசர கால விமான குடையில் இறங்கி வருகிறார். எந்தவித பரபரப்பையும் முகத்தில் காட்டி கொள்ளாத அந்த விசித்திர பெண், ஊர்தியின் அருகாமையை அடைந்ததும், அங்கு ஏற்கனவே தனக்காக வைக்கபட்டிருந்த ஆடையை எடுத்து அணிய தொடங்குகிறார் (ஜேம்ஸ் மனது என்ன பாடுபடும், அய்யகோ).

என்ன நடக்கிறது என்று ஆராய(?!), ஜேம்ஸ் அப்பெண்ணை நெருங்கும்  வேலையில், சிவபூஜையில் கரடி போல உள்ளே நுழைகிறான் ஒரு முரடன்.  அவனை சமாளிக்க அவனுடன் மோத ஜேம்ஸ் தயாராகும் போது, பின்னால் இருளிள் மரண போராட்டம்இருந்து அவரை தாக்க தொடங்குகிறார் அந்த பெண். இருவரின் தாக்குதலில், சற்று நிலை குலைந்தாலும், ஒரு வழியாக அந்த ஆசாமியை கூரிய கட்டை ஒன்றை கொண்டு தாக்கி வீழ்த்துகிறார்.
ஆனால் சாவதற்கு முன், அந்த நபர் அந்த பெண்ணையும் பரலோக பயணத்திற்கு தன் துணைக்கு அழைத்து சென்று விடுகிறான். (பெண்கள் உடன் இருந்தால் பரலோக பயணம் கூட சுகபடும், என்று எந்த போலி சாமியார் அவருக்கு அறிவுரை கூறினாரோ)
அவர்களிடம் இருந்து எவ்வித விஷயத்தையும் கிரகிக்க முடியாமல் போனதை எண்ணி வருந்தும் வில்லியமிடம், அவர்கள் ரஷ்ய மொழியில் பேசி கொண்டதை தெரிவிக்கிறார் ஜேம்ஸ். அதன் அடிப்படையில் நெவ்ஸ்கி என்ற அடைமொழி, அலெக்சான்டர் நெவ்ஸ்கி என்ற பழங்காலத்து ரஷ்யாவின் கிராமப்புற வீரனை குறிக்கலாம் என்றும் கூற்றை எடுத்து வைக்கிறார்.
இந்த மர்மத்தை பற்றி அவர்கள் மேலும் பேசும் முன், கிரேசி கார்ன்வால் என்ற பகுதியில் இரவில் நடமாடும் பேய் வீரன் பற்றிய ஒரு புரளியை அறிய தருகிறார்.
அப்போது, திடீரென்று அலைவரிசை தடைபடும் வானொலி பெட்டி, அவர்கள் மர்மம் புலப்படுகிறது கவனத்தை கவர்கிறது. வழக்கமான இசை நிகழ்ச்சியின் நடுவே, திடீரென்று ஒலிக்கும் ஒரு மர்ம குரல், தன்னை இங்கிலாந்தின் ஆர்தர் மன்னர் என்று சூழரைக்கிறது. தொடர்ந்து பேசும் அந்த குரல், 20ம் நூற்றாண்டின் இங்கிலாந்து பிரஜைகளை, தங்கள் பாரம்பரிய பெருமைகளை காக்க வழியுறுத்தி விட்டு, தான் மீண்டும் அவர்கள் முன்பு தோன்றுவதற்கான அடையாளத்தை விரைவில் வெளியிடுவதாக கூறி, முற்றுபெருகிறது.
தொடர்ந்து நடக்கும் விடயங்களை ஒன்று சேர்க்கும் ஜேம்ஸ், இது ஒரு பெரிய சதிவலையின் ஆரம்பமாக இருக்கலாம் என்று கணிக்கிறார். இதற்கிடையே கார்னிவாலில் நிருபர் ஒருவர் அந்த பேய் வீரனை நேரில் கண்டதாகவும், விரட்டி செல்லும் போது, அது மர்மமான முறையில் மறைந்து விட்டதாகவும் தகவல் வந்து சேர்கிறது.
அடுத்த நாள், வில்லியம் மூலம் ஜேம்ஸிடம் முந்தைய தினம் மோதிய ஜோடி,  ரஷ்ய உளவாளிகள் என்றும் உலக நாட்டோ கூட்டமைப்பு நாடுகளிடம் விரோத போக்கை கடைபிடிக்கும் ஸ்மெரிஷ் என்ற கும்பலுடன் தொடர்பு உள்ளவர்கள் என்றும் தெரிய வருகிறது. மேலும் இதை பற்றி ஆராய, அந்த ரஷ்ய உளவாளியின் வீட்டிற்கு சோதனையிட செல்லும் ஜேம்ஸை அங்கே மறைந்திருக்கும் மர்ம மனிதன் வீழ்த்தி விட்டு தப்பி ஓடி விடுகிறான். அதற்கு பிறகு நிதானத்திற்கு திரும்பும் ஜேம்ஸ், அங்கு சோதனையிடும் போது சமீபத்தில் உபயோகபடுத்தபட்ட புகைபட கருவி ஒன்று அகப்படுகிறது. மர்ம ஆசாமி தேடி வந்தது அதுவாக தான் இருக்கும் என்று ஜேம்ஸ் அனுமானிக்கிறார். (பெரிய கண்டுபிடிப்புதான், சாமி)
மந்திரி கடத்தல் தகவல்அப்புகைபடங்களை பிரதி எடுத்து பார்க்கையில், அவை பாறைகள் நிறைந்த ஒரு கடற் பகுதியினை சுற்றி படமாக்கபட்டவைகள் என்று புலப்படுகிறது. அந்த இடத்தை இணம் காண, கடற்படைக்கு அனுப்பபட்டிருப்பதாக வில்லியம் ஜேம்ஸுக்கு தெரிவித்து கொண்டிருக்கும் போது, உளவுத்துறை தலைவர் ‘எம்’மிடம் இருந்து இங்கிலாந்து ராணுவ மந்திரி திடீரென்று  கடத்தபட்டிருப்பதாக தகவல் வந்து சேருகிறது.
நேட்டோ நாடுகளின் சகல விஷயமும் அத்துபடியான இராணுவ மந்திரி எதிரிகள் கைகளில் அகப்பட்டால் பெரிய ஆபத்து வந்து சேரும், என்று எம் கவலை தெரிவிக்கிறார். நெவ்ஸ்கி நடவடிக்கைக்கு மந்திரி கடத்தல் தான் சாராம்சமோ என்று ஜேம்ஸ் யோசிக்கும் வேளையில், கடற்படை மூலம் அந்த மர்ம புகைபடங்கள் எடுக்கப்ட்ட இடம் கார்ன்வாலை ஒட்டிய பவ்னே துறைமுகபகுதி என்று தெரிய வருகிறது. மர்ம வீரன் தோன்றுவதாக கூறபடும் இடமும் அதுவே என்பதால், நேரில் சென்று துப்பு துலக்க ஜேம்ஸ் புறப்படுகிறார்.
கார்ன்வாலில் முன்பு ஆவியை நேரில் பார்த்தாக கூறபட்ட பத்திரிக்கையாளனை பிரகாசிக்கும் ஆவி வீரன்சந்திக்க ஜேம்ஸ் முயலும்போது, அவர் மர்மமான விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதாக தெரிய வருகிறது. அவனை சந்திக்கும் ஜேம்ஸிடம், தன்னை வேண்டுமென்றே சாகடிக்க தான் அந்த விபத்து நடத்தபட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறான். அவனிடம் கிடைத்த தகவல்களை கொண்டு, அன்று இரவு ஆவி உலவும் அந்த பிரதேசத்தை சென்றைடையும் ஜேம்ஸ், மறைந்து இருந்து நோட்டம் விட ஆரம்பிக்கிறார்.
சொல்லி வைத்தாற்போல், இரவின் அந்த அந்திம வேளையில் பிரகாசிக்கும் ஒளியுடன் ஆவி வீரன் குதிரையில் ஆரோகணித்து பயணம் செய்கிறான். அந்த மர்ம உருவத்தை பின்தொடர்ந்து செல்லும் ஜேம்ஸ், ஒரு குன்றின் பின்புறம் அது மறைந்து போவதை பார்க்கிறார். அங்கு மேலும் ஆராயும் அவர், சந்தேகித்தபடி அங்கு ஒரு மர்ம குகையின் நுழைவாயில் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
அந்த இருட்டு குகையில் வரும் வெளிச்சத்தை நோக்கி பயணிக்கும் ஜேம்ஸ், மர்மம் அவிழ்கிறதுகுகையின் மைய பகுதியில், அந்த ஆவி வீரனும் இன்னொரு இளம் வாலிபனும் இருப்பதை பார்க்கிறார். ஆவி வீரன் தன் பளபளக்கும் கவச உடைகளை கழட்ட, அந்த உருவத்தின் பின் இருப்பது ஒரு இளம் பெண் என்று ஜேம்ஸுக்கு தெரிய வருகிறது. அக்குகை ஒரு கைவிடபட்ட தகர சுரங்கம் என்பதும், அதை உபயோகித்து தான் அந்த பளபளக்கும் வண்ணத்தை கவச உடையில் சேர்த்திருக்கிறார்கள் என்றும் ஜேம்ஸ் கண்டுபிடிக்கிறார்.
அவர்கள் இருவரும் பேசி கொள்வதை வைத்து, இரண்டாவது ஆர்தர்  மன்னனின் வருகைக்காக அவர்கள் தயாராகி கொண்டிருப்பதும், டிர்க் என்பவர் கோட்டை ஒன்றில் இவர்களுக்காக காத்திருப்பதும் தெரிய வரும் ஜேம்ஸ், அவர்களை பின்தொடர முனைகையில் அவர்களால் தாக்கபட்டு மயக்கமுருகிறார். சுயநினைவு திரும்பிய போது, தன் துப்பாக்கியும் அவர்களையும் காணாது, குகையின் உள்ளே தேடி கலைக்கிறார்.
பின்பு தன் வாகனத்திற்கு திரும்ப வந்து, வரைபடம் மூலம் அருகில் இருக்கும் ஒரே கோட்டை பென்சில்லி என்று அறிந்து கொள்கிறார். அவர்கள் அக்கோட்டையை தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கும் ஜேம்ஸ், அவ்விடத்தை நோக்கி விரைகிறார்.
கோட்டை புணரமைப்பு பணியில் இருப்பதாக கூறும் கோட்டையில் அதிரடி பிரவேசம்பலகையை சட்டை செய்யாமல், அந்த அழகிய கோட்டையை அடையும் ஜேம்ஸ் அங்கு அவர் தேடி சென்ற இரு நபர்களான, ஆலன் மட்டும் ஸ்வான் உடன் அக்கோட்டையின் இளைய பிரபு டிர்க் என்பவனும், இருப்பதை காண்கிறார். அவர்களுடன் இராணுவ மந்திரி மயக்க நிலையில் கட்டிலுடன் கட்டபட்டிருப்பதையும் காண்கிறார்.
ஜேம்ஸை பார்த்து அதிர்ந்து போகும் அந்த நபர்களிடம் மந்திரியை கடத்திய ராஜ துரோக குற்றத்திற்காக கடுமையான தண்டனை பெற முடியும் என்று எச்சரிக்கிறார், ஜேம்ஸ். ஆனால், அந்த மூவர் கூட்டணியோ, தாங்கள் எந்தவித விரோத போக்கிற்காகவும் இவ்விடயங்களை செய்யவில்லை என்றும், இங்கிலாந்தை நல்வழிக்கு அழைத்து செல்ல வேண்டுமானால், ஆர்தர் மன்னர் போல தோன்றி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காகவே, இச்செயல்களை அவர்கள் செய்ய துணிந்தார்கள் என்றும் அறிய தருகிறார்கள்.
ஆனால் ஜேம்ஸ் இவர்களை பகடை காய்களாக மர்ம கும்பல் பராக்பயன்படுத்தி, பின்புறத்தில் ஒரு பெரிய ஸ்தாபனம் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு புரிய வைத்து கொண்டிருக்கையில், மர்மமான முகமூடி அணிந்த ஒரு கும்பல் அங்கு அதிரடி பிரவேசம் செய்கிறது. ஜேம்ஸ் அவர்களிடம் இருந்து தப்பித்தாலும், டிர்க்கும், ஆலன், அவர்கள் குண்டுக்கு இரையாகிறார்கள். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அக்கும்பல் இராணுவ மந்திரியை கடத்தி சென்று விடுகிறது.
அக்கும்பல் அவ்விடத்தை விட்டு அகன்றவுடன் திரும்ப வந்து சேரும் ஜேம்ஸ் (என்ன ஒரு டகால்டி பேர்வழி?), ஸ்வான் ஆடைகள் கழையபட்டு, மந்திரிக்கு பதிலாக அக் கட்டிலுடன் பிணைக்கபட்டிருப்பதை காண்கிறார் (காணா கண் கொள்ளா காட்சி ஆச்சே அது. அப்பதுமையை சிதைக்காத விரோதிகள் வாழ்க).
எஞ்சிய பக்கங்கள் ஜேம்ஸ் மர்ம கும்பலை  மடக்கி பிடித்தாரா ? அவர்களின் விபரீத நோக்கங்களை வெளிக்கொணர்ந்தாரா ? அவர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் இராணுவ மந்திரியை காப்பாற்றினாரா ? அவர் கூடவே நிழலாக தொடர போகும் இளம் பெண் ஸ்வான் அவருக்கு உதவியா இல்லை உபத்தரவமா ? என்ற கேள்விகளுக்கு நேரத்துடன் போட்டி போட்டு நடக்கும் பரபரப்பு காட்சிகளில் விடை அளித்திருக்கிறார்கள், ஜேம்ஸின் பல சாகஸங்களுக்கு உயிர் கொடுத்த அதன் கர்த்தாக்கள், ஓவியர் யாரோஸ்லவ் ஹோரக், மற்றும் எழுத்தாளர் ஜிம் லாரண்ஸ்.
சாதாரண விளையாட்டாகவோ, இல்லை புரட்சிகரமான செய்கைகளினாலோ சமுதாயத்தில் மாற்றத்தை உண்டு பண்ண நினைக்கும் அக்கால இளைய சமுதாயத்தினருக்கும் சரி, இக்கால இளரத்தங்களுக்கும் சரி, தீர ஆராயமல் செய்யப்படும் அச்செயல்களினால் ஏற்படும் பேராபத்தை சுட்டிகாட்டும் சாகஸமாக பாண்டின் இக்கதை ரசிகர்களுக்கு பரிச்சயமாகிறது.
இக்கதை ஜனவரி 16, 1976 ல் இருந்து ஜுன் 1, 1976 வரை இங்கிலாந்தின் டெய்லி எக்ஸ்பிரஸில் ஹாட் ஷாட்ஸ் (Hot-Shots) என்ற பெயரில் வெளியான ஒரு சித்திர தொடர் ஆகும். வழக்கமான இயான் ப்ளமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் நாவல் வடிவங்களில் இருந்து விலகி, எழுத்தாளர் ஜிம் லாரண்ஸ் தானாக எழுதிய கதைகளில் இதுவும் ஒன்று.
ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஹோரக்கின் அட்டகாசமான சண்டை காட்சிகளின் தத்ரூப வடிவங்களுடன், முந்தைய இதழ் போலவே இந்த கதையிலும் சண்டைகளில் ஜேம்ஸ் பதுங்கி பாயும் புலியாக உருவகபடுத்தியிருக்கிறார், எழுத்தாளர் லாரண்ஸ். எதிராளிக்கு பதிலுக்கு பதில் கொடுத்தாலும், முக்கிய கட்டங்களில் அவரை வீழ்த்தி எதிராளிகள் தப்பிப்பதாகவே காட்டபட்டிருக்கிறது.
சொல்ல போனால் இளைஞர்களான ஆலன், ஸ்வான் கைகளில் கூட அவருக்கு அதே நிலைமை தான் என்று பார்க்கையில் அவர் மேல் பரிதாபம் பட தோன்றுகிறது. ஆனால், செய்தி தாள் தொடராக வந்த இச்சித்திரக்கதை தொடரில், இப்படிபட்ட கட்டங்கள் தான் ரசிகர்களை ஒவ்வொரு நாள் சித்திர பட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் என்பதை நினைக்கையில், அவற்றை மன்னித்து விட்டு விடலாம்.
ஆவி மனிதனை அவர் நெருங்கும் அக்காட்சிகள், சிறு வயதில் நான் இந்த புத்தகத்தை படித்த போது ஒரு பெரிய எதிர்பார்ப்பையும், கிலியையும் ஏற்படுத்திய கட்டங்கள். ஆனால், இக்காலத்தில் அவைகளை மீண்டும் படிக்கையில், அது அப்படி ஒரு உணர்வை கொண்டு வராமல் இருப்பது நமது முதிர்ச்சியின் விளைவாக இருக்கலாம்.
வழக்கம் போல இத்தொடரிலும், ஜேம்ஸுக்கு அவர் அழகிய ஆபத்துமச்ச பலன் படி அழகிகள்  ஆபத்தில் அழகி எதிரிகள் ரூபத்திலும், சாகஸ துணைவிகளாகவும் கிடைத்த வண்ணம் இருக்கிறார்கள். இளம் பெண்களை தவிர அவரின் வாழ்க்கையில் வேறு பெண்களுக்கு இடம் இல்லாமல் பார்த்து கொள்கிறார் கதாசிரியர். அதற்கு பக்கபலமாக அவைகளை உருவகபடுத்துவதில் அதிக சிரத்தையுடன் பணிபுரிகிறார்,  ஹோரக். (மனிதருக்கு அழகிய யுவதிகளையும், ஜேம்ஸையும் அச்சர சுத்தமாக வரையும் போது வரைகலன் ஆனந்த தாண்டவமாடுகிறது)
ஆனால், அந்த அழகிய மேனிகளில், இம்முறை நமது ராணி காமிக்ஸ் குழுமம் தங்கள் வேலையை காட்டியிருப்பார்கள். அழகியை தேடி’யை போன்ற  காட்சிகள் இக்கதையிலும் அடங்கி இருந்தாலும், அதற்கு மூலாம் பூசும் வேலைகளை அங்கங்கே தவறாமல் செய்து திறமைகள் சோதிக்கபடுகின்றனவிட்டார்கள். குழந்தைகளை சென்றைடைய வேண்டிய புத்தகம் என்ற எண்ணம் அவர்களுக்கு மேலோங்கி இருந்ததற்கான அறிகுறி அது என்று கொள்ளலாமா?
ஆனால் ஜேம்ஸ் பாண்டிற்கே உண்டான தனி கவர்ச்சியை அவர்களால் மறைக்க முடியுமா? கடைசி காட்சிகளில், வழக்கம் போல தன் வேலையிலேயே கண்ணாக ஜேம்ஸ் முடிக்கும் கட்டம் - ‘ஏ1’ (சோதிக்காமல் மனிதர் எதையும் விட மாட்டாரே) , என்றால் அதற்கு தமிழ் உண்மையாகவே டெய்லி எக்ஸ்பிரஸ் தான்மொழியாக்கம் டாப் டக்கர்.
கதையின் போக்கில் ஜேம்ஸ் படிக்கும் பேப்பரின் பெயரை பார்த்தீர்களா? அப்போது ஆங்கில மூலத்திற்கு உண்மையாக மொழிபெயர்த்திருக்கும் ராணி நிர்வாகம், பிற்பாடு ஜேம்ஸை தினத் தந்தி யெல்லாம் படிக்க வைத்தது இன்னொரு கதை.
ஆனால், இந்த இதழுடன் ராணி நிர்வாகம் ஒரு புதுமையை அறிமுகபடுத்திற்று. கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் கதையின் ஆரம்பத்தில், கதையின் முக்கிய கதாபாத்திரங்களை வரிசையாக நமக்கு ஒரே பக்கத்தில் அறிமுகபடுத்தியிருப்பர். ஓவியங்களை இணங்கண்டுகொள்ள முடியாத அந்த சிறுவயதில், கதையின் போக்கே படித்து கொண்டு செல்கையில் வில்லியம் என்றால் யார்? எம் என்றால் யார்? என்று தெரிந்து கொள்ள இப்பக்கம் உதவியாக இருந்தது என்பதை கூறுவதில் தயக்கம் இல்லை. இப்பாணியை பிற்பாடு அனைத்து ஜேம்ஸ் கதைகளுக்கும் தொடர்ந்து பயன்படுத்தியது ராணி குழுமம்.
அதோடு இல்லாமல், வழக்கமான விளையாட்டுப் பக்கங்களுடன், வழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்முதல் முறையக வாசகர் கடிதம் அறிமுகம் வாசகர்களின் கடிதங்களும் அறிமுகமானது இவ்விதழில் இருந்து தான். ராணி காமிக்ஸை பற்றி உருகி உருகி கருத்திட்டிருக்கும் இந்த அன்பர்களில் சிலராவது இன்னும் சித்திரக்கதைகளுக்கு ரசிகர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அவர்கள் கருத்திட்ட ராணியின் முதல் இதழான, அழகியை தேடியை பற்றிய நமது முந்தைய பதிவை நீங்கள் இங்கே படித்து கொள்ளலாம்.
வழக்கம் போலவே சிறப்பு விளம்பர பகுதிகள் இந்த இதழிலும் பின்னட்டையை  முன் அட்டையின் உள்பகுதியில் ராணி வார இதழ் விளம்பரம்பின் அட்டையில் லாட்டரி சீட்டு விளம்பரம் அலங்காரம் செய்யும் போது, முன் அட்டையின் உள்ளே, இந்த சமயம் இடம் பிடித்து கொண்டது, ராணி நிர்வாகத்தின் இன்னொரு வெளியீடான ராணி வார இதழ். தற்போதும் இந்த புத்தகம் வெளிவருவதாக தான் நினைக்கிறேன். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
இதழ்களின் இச்சிறப்பு அம்சங்களுக்கு முழு முதல் காரணம் ஆசிரியர் திரு.ராமஜெயம் அவர்கள் தான். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் சிரத்தையுடன் அழகாக வடிமைப்பதில் அவர் காட்டிய அக்கறை வார்த்தைகளில் வடிக்க முடியாதது. தற்போது அவர் ஆள் அரவம் இல்லாமல் இருப்பது தமிழ் பத்திரிக்கைகளின் பேரிழப்புதான் என்றே சொல்லலாம்.
வழக்கம் போல, அடுத்த ராணி காமிக்ஸ் இதழின் விளம்பரம், தப்பி ஓடிய இளவரசி விளம்பரம்இப்புத்தகத்திலும்  இடம் பிடிக்கிறது. ஒரு புது மாதிரியாக தப்பி ஓடிய இளவரசி என்னும் ஒரு சித்திர கதைக்கான விளம்பரம், வாசகர்களின் கவனத்தை திருப்பி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த கதையை படிக்க ஆவலுடன் குறுக்கெழுத்துப் போட்டிநானும் காத்திருந்தேன். நமது அடுத்த பதிவில், அந்த இரண்டு இளம் தளிர்களின் போராட்டத்தின் நினைவுகளை நாமும் அசை போடலாம் நண்பர்களே.
அது வரை, இந்த இதழில் வெளிவந்த குறுக்கெழுத்து போட்டியை முயன்று பாருங்களேன். அதற்கான விடை இந்த புத்தகத்திலேயே வெளிவந்திருந்தாலும், அதை அடுத்த பதிவோடு பகிர்கிறேன். (கொஞ்சம் முயன்றுதான் பாருங்களேன்)
இத்துடன் நமது ராணி காமிக்ஸின் மூன்றாம் இதழின் நினைவுகூறல் முடிவடைகிறது, நண்பர்களே.
இனி வாக்களித்தபடி, முதல் பத்தியில் இருக்கும் முண்ணுக்கு பிண்ணான வார்த்தைகளுக்கு விளக்கம் – அது கிட்டதட்ட ஒரு வருடம் முன்பு இப்பதிவை நான் எழுத ஆரம்பித்த போது இருந்த காலத்தை ஒட்டியது என்பதே. கடைசியாக இப்பதிவேடில் நான் ஒரு பதிவை இட்டு ஒரு வருடம் ஆகி விட்டது என்று எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. கூடவே, என்னை நானே திட்டி கொள்ளவும் செய்கிறேன்.
உண்மையில் கூற போனால், அலுவலகம் மட்டும் தனிபட்ட வேலைகளில், இரு பதிவேடுகளை பேணி காப்பதில் இருந்த கஷ்டங்களே அதற்கு காரணம். நடுவில் எப்பாடு பட்டேனும் இப்பதிவை பூர்த்தி செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், அவசர கதியில் இப்பதிவு பாதி பூர்த்தியாகியபடி பல முறை தளத்தில் பள் இளித்து விட்டது. அதை நம்பி ஆசையுடன் படிக்க வந்து ஏமாந்து போன ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
நான் கடைசியாக இங்கே பதிவிட்ட போது பின்தொடர்பாளர்கள் பட்டியலில் இருந்தவர்கள் வெறும் 20 பேர். இன்று அதன் எண்ணிக்கை 50 ஐ தாண்டி விட்டது. என் சோம்பேறித்தனத்தை உடைத்து, மீண்டும் இத்தளத்தில் நான் பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டு பண்ணியது, இத்தகைய வாசகர்களின் ஆதரவே.

இப்பதிவேடை நான் கை விட்டு விடவில்லை என்பதை நிரூபிக்க புதிய பல மாற்றங்களை பதிவேடின் அமைப்பில் சேர்த்திருக்கிறேன். அதோடு, இனி சீரான இடைவேளையில் பதிவுகளை பதிவேற்றம் செய்ய உறுதியான முடிவையும் எடுத்துள்ளேன். எப்போதும் போல உங்கள் ஆதரவை, ராணி காமிக்ஸுடனான உங்கள் அனுபவங்களை இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளுவதின் மூலம் நீங்கள் தெரியபடுத்தினால், மிகவும் சந்தோஷபடும் நபர்களில் நானும் ஒருவன் என்று கூறி, இப்பதிவை முடிக்கிறேன்.

மீண்டும் அடுத்த ராணி காமிக்ஸ் விமர்சன பதிவில் சந்திப்போம் தோழர்களே. நன்றி.

51 பின்னூட்டங்கள்